தமிழகத்தை உலுக்கிய ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு எப்போது?

Report Print Arbin Arbin in இந்தியா
154Shares
154Shares
ibctamil.com

தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பிற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள் ஹாசினியை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்ற இளைஞர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது. மொத்தம் 42 ஆவணங்களும் 30 சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில் நாளை புதன்கிழமை தீர்ப்பிற்கான திகதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்