தமிழக முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் 31 மாநில முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 177 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அருணாசல பிரதேச முதலமைச்சர் பெமா கண்டூ உள்ளார்.

3-வது இடத்தில் பஞ்சாப் மாநில முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் உள்ளார். 4-வது இடத்தில் தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் உள்ளார்.

5-வது இடத்தில் மேகாலயா முதலமைச்சர் முகுல் சங்மா உள்ளார். இதே வரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 7.8 கோடி சொத்துகளுடன் 12-ஆவது இடத்தில் உள்ளார்.

முதல்வர்களின் சொத்து மதிப்பு:

 • ஆந்திரா - சந்திரபாபு நாயுடு - ரூ.1,77,48,95,611
 • அருணாசல் பிரதேசம் - பெமா கண்டூ - ரூ.1,29,57,56,014
 • பஞ்சாப் - அமரிந்தர் சிங் - ரூ.48,31,71,009
 • தெலங்கானா - சந்திர சேகர் ராவ் - ரூ.15,15,82,464
 • மேகாலயா - முகுல் சங்மா - ரூ.14,5077,833
 • கர்நாடகா - சித்தராமையா - ரூ.11,22,15,000
 • புதுச்சேரி - நாராயணசாமி - ரூ.9,65,93,971
 • தமிழகம் - எடப்பாடி பழனிசாமி - ரூ.7,80,66,586
 • டெல்லி - அரவிந்த் கெஜ்ரிவால் - ரூ.2,09,85,366
 • கேரளா - பினராயி விஜயன் - ரூ.1,07,16,684
 • உத்தரபிரதேசம் - யோகி ஆதித்யநாத் - ரூ.95,98,053
 • திரிபுரா - மாணிக் சர்கார் - ரூ.26,83,195

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்