சாவிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த துக்கத்தில் கணவர் மரணம்

Report Print Kabilan in இந்தியா

சேலத்தில் தனது மனைவியின் இறப்பினால் ஏற்பட்ட துக்கம் தாங்க முடியாமல் கணவரும் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி(75), ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான இவருக்கு அம்சா(70) எனும் மனைவி இருந்துள்ளார்.

இவர்களின் ஒரே மகளுக்கு திருமணமான நிலையில், இருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளனர்.

மேலும் அதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் அம்சா உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார். இதனால் சுப்ரமணி மிகவும் சோகமாக காணப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 4 மணியளவில் சுப்ரமணியும் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், இந்த தம்பதிக்கு உறவினர்கள், ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்பு, இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்