கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு

Report Print Harishan in இந்தியா

தமிழக எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்க உள்ளதாக கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்திருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரின் படத்தை சட்டசபையில் திறக்ககூடாது என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று திட்டமிட்டபடி காலை 9.30 மணிக்கு ஜெயலலிதாவின் படத்தை முதலமைச்சர் முன்னிலையில் பேரவைத் தலைவர் தனபால் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

சுயேட்சை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட டிடிவி தினகரன், இரட்டை இலையில் போட்டியிட்டு வென்ற கருணாஸ், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் இந்த விழாவில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்