மேக்கப் போட அழைத்து ஓடும் காரில் சிறுமி பலாத்காரம்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Harishan in இந்தியா

இந்தியாவில் மணப்பெண்ணுக்கு மேக்கப் போட அழைத்து, ஓடும் காரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், மணப்பெண்களுக்கு மேக்கப் போடும் பணியை பொழுதுபோக்காக செய்து வந்துள்ளார்.

கடந்த 5-ஆம் திகதியன்று அந்த சிறுமியை தேடி வந்த அவருக்கு தெரிந்த பெண் ஒருவர், மணப்பெண் ஒருவருக்கு மேக்கப் போட வேண்டும் என அழைத்துள்ளார்.

அவரை நம்பிய அந்த சிறுமியும், உடன் வருவதாக ஒப்புக்கொண்டு அவர்கள் வந்த காரில் ஏறி சென்றுள்ளார்.

அப்போது காரில் இருந்த பல்விந்தர் சிங், குல்வந்த் சிங், ஜாசி, ஹர்தீப் சிங் என்னும் நபர்கள் சிறுமியை கண்மூடித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்து காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் உன்னை கொன்று விடுவோம் என அவர்கள் மிரட்டியதால், இது குறித்து சிறுமி யாரிடமும் கூறவில்லை என தெரிகிறது.

இந்நிலையில் ஒரு வாரமாக மனமுடைந்த நிலையில் இருந்த சிறுமி, தற்போது அவரது வீட்டில் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவுசெய்து அந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்