ரஜினியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை: கமல்ஹாசன் உறுதி

Report Print Raju Raju in இந்தியா

அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பஙகேற்றார்.

அப்போது தனது அரசியல் குறித்து அவர் பேசுகையில், எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு. ஒரு கல்லூரி விழாவில் கையெழுத்திட்டு என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொண்டேன்.

இந்த விழாவில் இரண்டாவது முறையாக என்னை அரசியல்வாதி என அறிவித்துக் கொள்கிறேன்.

எனக்கும் நண்பர் ரஜினிக்கும் ஒரே நோக்கம் என்றாலும் பாதை வேறு, அதனால் அவருடன் சேர்ந்து செயல்பட வாய்ப்பில்லை.

ரஜினியின் ஆன்மிக அரசியல் காவி அரசியலாக இருக்காது என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்