தூக்கில் தொங்கிய மாணவி: இந்த வீடியோ தான் காரணமாம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் சக மாணவ, மாணவிகள் தொந்தரவு கொடுத்தும், துன்புறுத்தியும் வந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் மேகனா (18). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் மேகனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனிடையில் கல்லூரியில் மேகனாவை சக மாணவ, மாணவிகள் துன்புறுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து மேகனாவின் அம்மா கூறுகையில், மேகனா கல்லூரி பிரதிநிதித் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார்.

இது அவரை எதிர்த்து போட்டியிடும் சக மாணவி ஒருவருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்த மாணவி தனது நண்பர்களுடன் சேர்ந்து மேகனாவை அடித்ததோடு, மிகவும் துன்புறுத்தியுள்ளார்.

இதோடு தனது செல்போனை காணவில்லை என கூறி அந்த பழியையும் மேகனா மீது மாணவி போட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதனிடையில், சக மாணவிகள் மேகனாவை கிண்டல் செய்து துன்புறுத்தும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த செயலில் ஈடுபட்ட மாணவி, மேகனா இறப்புக்கு பிறகு கல்லூரிக்கு வராத நிலையில் பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்