கணவனை கொன்று துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் கொட்டிய மனைவி: அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் பீகாரில் மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவனை, மனைவி காதலனுடன் இணைந்து கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி கழிவறையில் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

பூர்னியா பகுதியில் புத்தககடை ஒன்றை நடத்தி வருபவர் 36 வயதான கோபால் பிரசாத். கடந்த திங்களன்று இரவு முதல் அவரை காணவில்லை என அவரது மனைவி வியாழனன்று பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த வெள்ளியன்று துண்டு துண்டாக நொறுக்கிய நிலையில் மனித உடல் பாகங்களை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து புகார் தெரிவித்த கோபால் பிரசாதின் மனைவியும் தலைமறைவாகியுள்ளார். இதில் சந்தேகமடைந்த பொலிசார் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

அதில் அவர் தமது கணவரை, காதலனின் உதவியுடன் கொன்றதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்துவரும் தங்களது உறவை அவர் கண்டித்ததால் கொலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண்மணியையும் அவருக்கு உதவி செய்த அந்த நபரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்