ஏய் களவானி பசங்களா... பரபரப்பை கிளப்பிய ஸ்டாலினின் பேச்சு!

Report Print Harishan in இந்தியா

கழகங்கள் இல்லாத தமிழகம் என பேசுபவர்களை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கடலூரில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில் பெயர் குறிப்பிடாமல் சிலர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், தமிழ்தாய்க்கு தற்போது அவமானம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் உருவாகும் நேரம் வந்து விட்டது. விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கழகங்கள் இல்லாத தமிழகம் என சிலர் எளிதாக பேசுகிறார்கள். ஏய் களவானிப் பசங்களா என விளித்து எல்லோரும் மேடை போட்டு பேசக்கூடிய நிலையை உருவாக்கியது திராவிட மண் என்றும், அதை மறந்துவிட்டு பேசக்கூடாது என்றும் ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலின் யாரை குறிப்பிட்டு இப்படி பேசினார்? அவர் பேசியதன் உள்நோக்கம் என்ன? என்பது போன்ற கேள்விகள் தமிழகம் முழுவதுமாக விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்