சென்னையில் சினிமாவை மிஞ்சிய ஒரு சம்பவம்

Report Print Kabilan in இந்தியா

சென்னையில், வடமாநிலத்திலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ரயிலில், கள்ளத்துப்பாக்கிகளைக் கடத்தி வந்த இருவரை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கவுகாத்தியிலிருந்து சென்னை வழியாக, திருவனந்தபுரம் செல்லும் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதில் சிலர் துப்பாக்கிகளைக் கடத்தி வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், பொலிஸார் தங்களை கண்காணிப்பதை அறிந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவர், ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து திருவொற்றியூர் அருகே கீழே குதித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களைத் துரத்திப் பிடித்த பொலிசார், துப்பாக்கி முனையில் அவர்களை கைது செய்தனர். இது குறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், ‘வடமாநிலத்தில் இருந்து சென்னை செண்ட்ரல் வரும் ரயிலில், சிலர் துப்பாக்கிகளைக் கடத்தி வருவதாகத தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களை நாங்கள் பின் தொடர்ந்தோம். பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் துப்பாக்கிக் கடத்தல்காரர்களைப் பிடிக்க திட்டமிட்டோம்.

எங்களைப் பார்த்ததும் திருவொற்றியூரில் இறங்கிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஓடத் தொடங்கினர். அவர்களிடம் துப்பாக்கிகள் இருப்பதால் கவனத்துடன் அவர்களைப் பின் தொடர்ந்தோம்.

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியனின் மரணத்திற்குப் பிறகு, கொள்ளையர்களைப் பிடிப்பதில் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்.

ஒரு கட்டத்தில் கொள்ளையர்களைத் துப்பாக்கி முனையில் எச்சரித்து சாதுர்யமாகப் பிடித்துள்ளோம். அவர்களிடம் இருந்து 5 நவீன ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 2 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.

எங்களிடம் சிக்கியவர்களில் ஒருவர் மீது வழக்கு உள்ளது. தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...