கொமடி காதலன்!

Report Print Kabilan in இந்தியா

சென்னையில் காதலியின் நினைவாகக் கொள்ளையடித்த 11 சவரன் நகையை, ஃபிரேம் போட்டு வைத்த திருடனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையச் சேர்ந்த குணசுந்தரி என்ற பெண், சில தினங்களுக்கு முன்பு மர்ம நபரால் தாக்கப்பட்டார். மேலும், அவரிடம் இருந்து 11 சவரன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து.

இதனைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். இரும்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த ஜான்சன், திருடிய நகைகளை தனது வீட்டில் ஃபிரேம் போட்டு வைத்துள்ளது தெரிய வந்தது.

இது குறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், ‘சைதாப்பேட்டை ஜோன்ஸ் தெருவில் ஜான்சன் சில ஆண்டுகளுக்கு முன்னர் குடியிருந்துள்ளார். அப்போது, அங்கு ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.

ஆனால், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. எனினும், அப்பெண்ணை மறக்க முடியாமல் தவித்துள்ளார் ஜான்சன்.

இந்நிலையில், குடிபோதையில் இருந்த ஜான்சன், தனது காதலியின் வீடு என்று நினைத்து, ஜோன்ஸ் தெருவில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்குச் சென்று, அவரை தாக்கிவிட்டு 11 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

போதையில் அந்த நகையை வீட்டில் ஃபிரேம் போட்டு பத்திரமாக வைத்துள்ளார். போதை தெளிந்த பின்புதான் கொள்ளையடித்த பெண் வேறொருவர் என்பது அவருக்கு தெரிந்துள்ளது. இதற்கிடையில் எங்களிடம் சிக்கிவிட்டார்’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...