மொத்த குடும்பத்தையும் கொலை செய்த இளைஞருக்கு சிறையில் ஏற்பட்ட சோகம்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் மொத்த குடும்பத்தையும் கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேடன் ஜேன்சன் ராஜா என்ற இளைஞர் அவுஸ்திரேலியாவில் படித்து வந்த நிலையில் தனது சொந்த ஊரான கேரளாவுக்கு கடந்த 2009-ல் திரும்பினார்.

தனது குடும்பத்துடன் கேடன் வசித்து வந்த நிலையில் கடந்தாண்டு ஏப்ரலில் தனது பெற்றோர், சகோதரி மற்றும் உறவினரை கொலை செய்தார்.

அமானுஷ்ய சக்தி குறித்து ஆராய்ச்சி செய்து வந்த கேடன் அது சம்மந்தமாக குடும்பத்தினரை கொலை செய்துள்ளார்.

தலைமறைவாக இருந்த அவரை பொலிசார் பின்னர் பல்வேறு விதமான தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்தனர்.

கேடன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று சிறையில் சாப்பிட்டு கொண்டிருந்த போது கேடனுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது, இதையடுத்து தொண்டையில் உணவு சிக்கி கொண்டுள்ளது.

இதை பார்த்த சிறை அதிகாரிகள் கேடனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேடனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில் செயற்கை சுவாசக்கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்