பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!

Report Print Deepthi Deepthi in இந்தியா

பிரபல பெங்காலி நடிகை சுப்ரியா தேவி மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார்.

பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவருக்கு வயது (85). பெங்காலி திரையுலகில் பல்வேறு வெற்றிபடங்களில் நடித்துள்ள இவர், தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவரது இறப்புக்கு மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், இனி அவரது படங்களின் மூலம் அவரை நினைவுகூர்வோம், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

திரையுல நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்