இந்தியாவின் 69வது குடியரசு தினம்: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் 69வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

எல்லை பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். உயரமான கட்டடங்களின் மேல் மாடியில் துப்பாக்கியுடன் கமாண்டோ வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் பொலிசாரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

டெல்லியில் 'ஆசியான்' மாநாடு நேற்று நடந்தது. இதில் உறுப்பு நாடுகளாக உள்ள தாய்லாந்து, இந்தோனேஷியா, சிங்கப்பூர், புருனே, லாவோஸ், மியான்மர், கம்போடியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்று உள்ளனர்.

இன்று நடக்கும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அவர்கள் பங்கேற்கின்றனர்.

எந்தவித அசம்பாவிதத்தையும் தடுக்கும் அளவில் பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி கொண்டு வரப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யார் நடமாடினாலும், அவர்களை பற்றி காவல்துறையிடம் தெரிவிக்க மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

ஓட்டல்களில் சரியான அடையாள அட்டையின்றி யாரையும் தங்க வைக்க வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்