நெய் திரண்டு வரும்போது இப்படி செய்யலாமா? பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் கதறல்

Report Print Santhan in இந்தியா
431Shares

பிச்சை எடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர் எங்களுக்கு சாவைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியிருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ஓமலூர் தாலுக்கா பாகல்பட்டி கிராமம் பூமிநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த தம்பதி சித்தன்-பெருமாயி.

இவர்களுக்கு சத்யா, சரண்யா, காளியப்பன் என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் சத்யா டிப்ளமோ அக்ரி மூன்றாம் ஆண்டும், சரண்யா பி.எட். முதல் வருடமும், காளியப்பன் பொறியியல் மூன்றாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.

பிள்ளைகள் தற்போது நன்றாக படித்து அதாவது நெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதை போல படிப்பு முடிக்கும் நிலையில் தாங்கள் இருக்கும் வீட்டை காலி செய்ய கூறுவதாக பெருமாயி கண்ணீர் விட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என் கணவருக்கு இரு கண்கள் தெரியாது. அவர் தெரு தெருவாய் பிச்சை எடுக்கிறார். நான் செங்கள் சூளைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வயிற்றை நிரப்புவதோடு,என்னுடைய 3 பிள்ளைகளையும் உயர் கல்விக்கு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.

எங்களுக்கு என்று இங்கு அடிபட்டா கிடையாது, எங்கள் முன்னோர்கள் வசித்து வந்த இடத்தில் தான் காலம் காலமாக வசித்து வருகிறோம்.

இந்நிலையில் திடீரென்று நாங்கள் இருக்கும் இடத்திற்கு பட்டா இல்லை என்று கூறி எங்களை காலி செய்ய கூறுகின்றனர்.

பிள்ளைகளை படிக்க வைத்துவிட்டால், நாம் முன்னேறிவிடலாம் என்று பிச்சையெடுத்து அவர்கள் படிக்க வைத்தும் வரும் நிலையில், அதிகாரிகள் இப்படி எங்களை வெளியேற கூறுவதால், சாவதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அவர்கள் இருக்கும் இடம் நீர் நிலை புறம்போக்கு. உயர்நீதிமன்றம் காலி செய்யச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறது. அதை அரசு அலுவலர்களாகிய நாங்கள் நடைமுறைபடுத்துவது எங்கள் கடமை. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்