சுராங்கனி புகழ் பாடகர் மற்றும் நடிகர் சிலோன் மனோகர் சென்னையில் இன்று காலமானார்.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிலோன் மனோகர் பாடிய சுராங்கனி என்னும் பாடல் 1970,80 காலக்கட்டங்களில் மிகவும் பிரபலமான பாடலாக விளங்கியது.
இந்த பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்த சிலோன் மனோகர், பின் நாட்களில் பாலிவுட் நடிகராகவும் கலக்கியுள்ளார்.
சிலோன் மனோகர் நடித்த அத்திப்பூக்கள், திருமதி செல்வம், அஞ்சலி போன்ற மெகாத் தொடர்கள் இன்றளவும் தமிழ்ப் பெண்களால் மறக்க முடியாத தொடர்களாகும்.
இலங்கை இசைத்துறையின் பாப் இசைச் சக்கரவர்த்தியாக விளங்கிய இந்த A.E.மனோகரன் என்னும் சிலோன் மனோகர் உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் 22-ஆம் திகதி காலமானார்.
தமிழ் மற்றும் இலங்கை திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இவரின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.