தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைக்கு மற்றுமொரு நபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.
திருக்காட்டுப்பள்ளியில் சந்தோஷ் என்பவரது பூக்கடையில் பணியாற்றி வந்த ராஜ் குமார், அவரிடம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கடையின் உரிமையாளரான சந்தோஷ் தனக்கு ராஜ்குமார் தர வேண்டிய கந்துவட்டி தொகையை வட்டியுடன் கேட்டு செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ராஜ்குமார் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தமிழகத்தின் திருநெல்வேலியில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.