முதலிரவில் மணப் பெண்ணுக்கு இப்படி ஒரு சோதனையா? எதிர்த்த இளைஞர்களுக்கு அடி, உதை

Report Print Santhan in இந்தியா
844Shares

இந்தியாவில் மணப்பெண் கன்னித்தன்மையுடன் உள்ளவர்தானா என்பதைப் பரிசோதிக்கும் பழக்கத்தை எதிர்த்த இளைஞர்களை 40 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை சாதித்திருமண நிகழ்வு தொடர்பாக கஞ்சர்பட் பிரிவைச் சேர்ந்தவர்கள் சாதிப் பஞ்சாயத்தைக் கூட்டியுள்ளனர். அதில் மணப்பெண்ணின் கன்னித்தன்மை குறித்து சோதனை நடத்த சாதிப்பெரியவர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர்.

கஞ்சர்பட் பிரிவினர் பொதுவாக திருமணம் முடிந்த பிறகு விடுதிக்கு முதலிரவைக் கொண்டாடத் தம்பதியர் செல்லும் போது மணப்பெண்ணிடம் வெள்ளை படுக்கை விரிப்பை அளிப்பார்கள்.

முதலிரவு முடிந்த வெள்ளை படுக்கை விரிப்பில் ரத்தக்கறை இருந்தால் அவர் கன்னித்தன்மை சோதனையில் தேறி விட்டதாக அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அப்படி ரத்தக்கறை இல்லையெனில் அவருக்கு கடந்த காலத்தில் வேறு ஒரு பாலுறவு இருந்துள்ளதாக குற்றம் சாட்டுவர்.

ஆனால் இந்த பழக்கத்தை எதிர்த்து 3 இளைஞர்கள் சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஞாயிற்றுக் கிழமை நடந்த பஞ்சாயத்தின் போதும் அவர்கள் இருந்துள்ளனர். அதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 40 பேர் கொண்ட கும்பல் இவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனால் அந்த மூவரில் ஒருவரான இந்த்ரேக்கர் என்பவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதுடன், 40 பேர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்