மனைவின் நடத்தையில் சந்தேகம்: கணவனின் கொடூர செயல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் ஒடிசாவில் நடத்தையில் சந்தேகம் அடைந்து மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் பஹிரதி மாலிக், அவரது மனைவி மற்றும் மகள் ஆகிய மூவரும் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் கணவன மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் கணவன் மாலிக் அவரது மனைவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலிக் தனது மனைவியை சந்தேகத்தின் பெயரில் வழக்கம் போல வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் மனைவியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார் மாலிக்.

இதனால் பலத்த காயமடைந்த அவரது மனைவி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இதனிடையே மாலிக்கின் குடியிருப்பில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கூடிய அக்கம் பக்கத்தினர், மாலிக்கின் மனைவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் மாலிக்கின் 20 வயது மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இவர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் பஹிரதி மாலிக்கை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...