கவிஞர் வைரமுத்து அவர்கள் ஆண்டாள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வைரமுத்துவை விமர்சித்து கர்நாடகா மாநிலத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் சிறுமிகள் பேசும் பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தங்களை சந்நியாசிகள் என அறிமுகப்படுத்திக்கொள்ளும் அச்சிறுமிகள், வைரமுத்துவை கெட்ட வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர்.
இந்நிலையில் சிறுமிகளை பயன்படுத்தி வைரமுத்து மீது மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து வரும் நித்யானந்தா ஆசிரமம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் கர்நாடகா மாநில பொலிசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் சந்நியாசிகள் எனக் கூறிக்கொண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் வசிக்கும் சிறுமிகளின் வீடியோ பேச்சு அடங்கிய பேஸ்புக் பக்கத்தையும் அவர் ஆதாரத்திற்கு இணைத்துள்ளார்.
தனிநபர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தாக்கி பேசுகின்றனர். மேலும் முஸ்லீலிம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராகப் பேசி மக்களிடையே அமைதியைக் குலைக்க நித்யானந்தா ஆசிரமம் முயல்கிறது.
எனவே அதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூஷ் மானுஷ் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.