திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம்? மண்டபத்தில் தவித்த மணமகள்

Report Print Gokulan Gokulan in இந்தியா
177Shares

சென்னை எழும்பூரை சேர்ந்த சரண்குமாருக்கும், திருவள்ளூரை சேர்ந்த பெண்ணுக்கும் இன்று திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து இருந்தனர்.

வழக்கம் போல திருமண வரவேற்பு நடைபெற்றது, இரவு 12 வரை மணமக்கள் போட்டோவிற்க்கு போஸ் கொடுத்துள்ளனர். இன்று காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மணமகள் அலங்காரத்துடன் தயாராக இருந்தார்.

மணமகனை தயார்படுத்துவதற்காக அவரது அறைக்கு நண்பர்கள் சென்று பார்த்த போது மணமகன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. ஆனால் இந்த விவகாரம் எதுவும் தெரியாமல் அவரது பெற்றோரும், உறவினர்களும் அங்கிருந்தனர்.

மணமகன் மாயமான தகவல் பரவியதும் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மணமகளும் அவரது உறவினர்களும் செய்வது அறியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர்.

திருமண நேரத்தில் மணமகன் ஓட்டம் பிடித்தது தொடர்பாக மணமகள் மற்றும் அவரது பெற்றோர் மணவாளநகர் பொலிசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து சரண்குமாரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து மணமகள் வீட்டார் கூறும்போது, அவர் திருமணத்துக்கு மறுத்து ஓட்டம் பிடித்தது ஏன்? என்று தெரியவில்லை திருமணம் நிச்சயம் நடந்ததில் இருந்து மணமகன் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கல்லை. சகஜமாகவே பேசி வந்தார். நேற்று இரவு வரவேற்பு நிகழ்ச்சியில் கூட சந்தோஷமாக இருந்தார்.

திருமணத்தில் விருப்பமில்லை என முன்னரே தெரிவித்து இருந்தால் எங்களுக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது என்று கவலையுடன் தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்