கழிவறையில் ஒளிந்து கொண்ட பெண்கள் ! யார் அந்த அழையா விருந்தாளி ?

Report Print Gokulan Gokulan in இந்தியா
779Shares

”பாரதி கண்ட புதுமை பெண்கள்” தைரியமாக இருக்க வேண்டும்.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிவரும் இக்காலத்தில் வினுதா மற்றும் வனஜாசக்தி ஆகிய இவ்விரண்டு பெண்கள் ஓர் அழையா விருந்தாளியை பார்த்து அலறியடித்திருக்கின்றனர்.

காலை 10 மணியில் இருந்து மதியம் 3 மணிவரை கிட்டத்தட்ட 5 மணிநேரம் கழிவறைக்குள் பதுங்கி ஒளிந்து கொண்டிருந்தனர். சுமார் ஆயிரம் பேருக்கு மேல் அவர்கள் இருக்கும் இடத்தில் கூடிய பிறகே பத்திரமாக வெளியே வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு பெண்களும் வசிக்கும் இடம் கர்நாடக மாநிலத்தின் துமாகுரு பகுதியாகும். வனப்பகுதியான இங்கு வனவிலங்குகளின் நடமாட்டமும் அடிக்கடி இருக்கும் நிலையில், நேற்று காலை உணவிற்காக குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று, இந்தப் பெண்களின் வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

அளவில் சிறியதாக காணப்பட்டாலும் இந்த சிறுத்தையைக் கண்ட பெண்கள், அலறியடித்துக் கொண்டு கழிவறைக்குள் ஒளிந்துகொண்டனர். இத்தகவலை அறிந்த வனத்துறையினர் மற்றும் பெனர்கட்டா உயிரியல் பூங்கா மருத்துவர்கள் என பலர் வந்து இந்தப் பெண்களை ஜன்னல் கதவை உடைத்து மீட்டுள்ளனர்.

வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையை மயக்க ஊசி போட்டு பிடித்துச்சென்ற வனத்துறையினர், அது மிகவும் பயந்துபோய் சிலிண்டருக்குப் பின்னால் ஒளிந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.

"பெண்கள் நம் நாட்டின் கண்கள்" என நாம் அறிந்தவையாகும், அப்படிப்பட்ட பெண்கள் இதுபோன்ற வணப்பகுதிகளில் வசிப்பவர்கள் உரிய பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்