தமிழ்நாட்டில் இப்படி ஒரு வழக்கமா!

Report Print Gokulan Gokulan in இந்தியா
109Shares

திருமணம் முடிந்த அடுத்த நொடியே பெண்கள் பிறந்த வீட்டை மறந்து விட்டு, தங்கள் புகுந்த வீட்டுக்கு செல்வது தான் வழக்கம் என்று திரைபடங்களிலும், நிஜ வாழ்விலும் கண்டுகளித்திருக்கிறோம்.

அந்த சூத்திரத்தை மாற்றி அமைத்திருக்கிறது இந்த ஊர் மற்றும் இங்கு வாழும் மனிதர்கள். அவர்கள் பற்றிய ஸ்வாரசிய தகவல்களை பற்றி தான் இப்பதிவில் காணப்போகிறோம்.

தமிழ்நாட்டில் காயல்பட்டினம், கீழக்கரை, தொண்டி போன்ற பகுதிகளில் இருக்கும் இஸ்லாமிய குடும்பங்களில்தான் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது. இது பற்றி கீழக்கரையைச் சேர்ந்த அமீனா என்ற குடும்பத்தலைவி சொல்வதைக் கேட்டால் பெண்களுக்கு விருந்து செய்தியாக இருக்கும் என்பதை உணர்வீர்கள்.

இந்த வழக்கத்துக்குப் பின்னால கதையே உள்ளது, சதகத்துல்லா என்கிற ஊர் பெரியவர், தன் மகளை நிக்ஹா செய்துகொடுத்தார்.

இந்தக் காலத்தில், வண்டி வசதியெல்லாம் கிடையாது என்பதால் ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்துக்கு நடந்ததேதான் போகவேண்டுமாம். அப்படியே நடந்து பொண்ணைக் கட்டிக் கொடுத்தவங்க சம்பந்தி வீட்டுக்குப் போனாலும், அவங்க மகளைப் பார்க்கிறதுக்காக அடிக்கடி வருவதை மணமகன் வீட்டில் விரும்ப மாட்டார்கள் என்பது நாம் அறிந்தவை.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், பெரியவர் சதகத்துல்லா ஒருநாள் நடந்தே மகளின் கிராமத்துக்குப் போய் சேருகையில், அங்கே மகள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாள்.

நலம் விசாரிக்கும் போது உள்ளங்கை புண் மாதிரி இருப்பதை அறிந்தவர், மகளைப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறார்.

வந்த ஒரு வாரத்தில் அவரது உள்ளங்கையிலும் புண் வந்து எந்த வேலையையும் செய்யமுடியாமல் தவிக்கிறார். அப்போதான் மகள் சொன்னதன் அர்த்தமும் அவளுடைய வலியும் புரியுது.

உடனே ஊரைக் கூட்டி, "இனிமே நம்ம ஊரில் நிக்ஹா முடிஞ்சு மணமகன்தான் பெண் வீட்டுடோடு இருக்கணும்னு சொல்றார். அதுக்கு ஊர்மக்களும் சம்மதிக்கிறார்கள். அதே வழக்கத்தையே காயல்பட்டினம், கீழக்கரை, தொண்டி போன்ற பகுதிகளில் வாழும் வம்சாவழியினர் கடைபிடித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்