மீண்டும் ஆரம்பித்த சுசி லீக்ஸ்: ஆபாச வீடியோ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
3312Shares

மீண்டும் சுசி லீக்ஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதால் நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.

இது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக சுசித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் பொலிசில் புகார் செய்தனர். நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் பக்கத்தில் ‘ஓராண்டு நிறைவு’ என்ற குறிப்புடன் நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின.

கபாலி படத்தில் ரஜினி பேசும் ‘வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்ற ‘பஞ்ச்’ வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.

தொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, எந்த நடிகையின் வீடியோ வேண்டும் என்ற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது. இதனால் நடிகைகளிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்