கழுத்தை அறுத்து காதலனின் திருமணத்தை நிறுத்திய காதலி: பரபரப்பு சம்பவம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கழுத்தை அறுத்து தனது காதலனின் திருமணத்தை நிறுத்திய காதலியால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சைதாப்பேட்டையை சேர்ந்த ஷோபனா- சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி வகுப்பில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டதன் மூலம் காதலர்களாக மாறியுள்ளனர்.

ஷோபனாவும், சத்தியமூர்த்தியும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களது காதலை சத்தியமூர்த்தியின் பெற்றோர் ஏற்கவில்லை.

ஆனாலும் பெற்றோர் எதிர்ப்பை மீறி சத்தியமூர்த்தி, ஷோபனாவை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார்.

வேலூர் அருகில் உள்ள முருகன் கோவிலில், இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். ஆனால், சொன்னபடி சத்தியமூர்த்தி கோவிலுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியிடைந்த ஷோபனா ஏமாற்றத்துடன், வீட்டுக்கு திரும்பிசென்று சத்தியமூர்த்தியை சந்தித்துள்ளார்.

அவர், எனக்கும் எனது உறவுக்கார பெண்ணுக்கும் வரும் 27 ஆம் திகதி திருமணம் என்று கூறி பத்திரிகையை எடுத்து ஷோபனாவிடம் கொடுத்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஷோபனா, தனது காதலனின் முன்னிலையிலேயே, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை காப்பாற்றி மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்தியமூர்த்தி மீது பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்திய பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதன் மூலம் மதுரையில் அவருக்கு இன்று நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers