சூர்யாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா
330Shares

சூர்யா நடிக்கும் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை வைத்து ஒரு தனியார் தொலைக்காட்சியில் ‘கிசு கிசு’ நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் சூர்யாவை கிண்டல் செய்யும் விதமாக அனுஷ்காவுடன் ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு, அமிதாப்பச்சனுடன் ஸ்டூல் போட்டு ஏறி நின்றுதான் பேசணும் என்று உயரத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

பெண் தொகுப்பாளர்களுக்கு நடிகர்கள் விஷால், கருணாஸ், இயக்குனர் விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தரம் தாழ்ந்த விமர்சங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயலுக்கு செலவீடுங்கள் என்று சூர்யா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பெண் தொகுப்பாளர்களுக்கு நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

உயரமானவர்கள் யார்? குள்ளமானவர்கள் யார் என்பதோ? அழகோ அல்லது கறுப்போ என்பது பிரச்சினை அல்ல. யார் உயரம்? யார் குள்ளம் என்பதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. எது பெரியது என்பதில் உங்கள் உள்ளத்தில் என்ன சந்தேகம்.

எதை வைத்து அழகு என்று நியாயப்படுத்துகிறீர்கள். சூர்யாவை பற்றி பேசியவர்கள் வெட்கப்பட வேண்டும். இது அர்த்தமற்ற பேச்சு. உங்களது பாலினத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்