இந்தியாவில் உயிருக்கு போராடிய இளைஞர்களை பொலிசார் வாகனத்தில் ஏற்றிச் செல்ல மறுத்ததால், அந்த இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அர்பீத் குர்ரானா(17), சன்னி கார்க்(17) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாரதவிதமாக, சாலையில் இருந்த பள்ளத்தில் மோதி தூக்கி வீசப்பட்டனர். இதனால் இருவரும் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசாரிடம், உயிருக்கு போராடிய இளைஞர்களை உங்கள் ஜீப்பில் ஏற்றிச் செல்லும் படி பொதுமக்கள் கெஞ்சியுள்ளனர்.
ஆனால் பொலிசாரோ ஜீப் கறையாகிவிடும் என்று கூறி, ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டனர். அதன் பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர்கள் அங்கு இறந்துவிட்டனர்.
பொலிசார் உரிய நேரத்தில் உதவியிருந்தால், அவர் பிழைத்திருப்பார்கள் என்று பொதுமக்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ர்ந்து, மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.