காதலியின் வீட்டிற்கு சென்று அதிர்ச்சி கொடுத்த காதலன்: இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் காதலன் ஏமாற்றியதால், இளம் பெண் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சளுக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஷீலா. இவர் சென்னை சைதாப்பேட்டையில் தனது தாயுடன் தங்கியிருந்து தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும் வேலூர் சிறையில் பரோல் பிரிவில் நன்னடத்தை அதிகாரியாக இருக்கும் சத்தியமூர்த்திக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

அதன் பின் இருவரும் காதலித்து வந்த நிலையில், சத்தியமூர்த்தி வீட்டில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்வதற்கு திட்டமிட்டு, சென்னை காட்பாடியில் உள்ள வள்ளிமலை முருகன் கோவிலில் திருமண ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அப்போது திடீரென்று சத்யமூர்த்தி, ஷீலாவிடம் நம்முடைய காதலுக்கு எங்கள் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், அதுமட்டுமின்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளனர் என்று தெரிவித்து, திருமண அழைப்பிதழை அவரிடம் கொடுத்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சத்தியமூர்த்தியின் தந்தை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 4 லட்ச ரூபாய் தருவதாகவும் தனது மகனை விட்டு விடும் படி கூறியும் மிரட்டியுள்ளார்.

ஆனால் ஷீலாவின் பெற்றோர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த பொலிசார்

சத்தியமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்