இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை என தகவல்!

Report Print Harishan in இந்தியா

திரைப்பட இயக்குநர் மகேந்திரன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் முள்ளும் மலரும் உதிரிப்பூக்கள் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்க்ளை தமிழ் திரையுலகிற்கு வழங்கியவர் இயக்குநர் மகேந்திரன்.

தமிழ் சினிமாவில் காதாசிரியராக அறிமுகமான மகேந்திரனுக்கு தற்போது வயது 78 ஆகும்.

இயக்குநராக பல ஹிட் தரைப்படங்களை வழங்கியுள்ள மகேந்திரன், கடந்த 2016-இல் வெளியான விஜய் நடித்த தெறி படத்தில் நடிகராகவும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக புதுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால் உணவு ஒவ்வாமை காரணமாக தான் மகேந்திரன் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்