டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம்

Report Print Arbin Arbin in இந்தியா

இரட்டை பதவி வகித்தது தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி இழக்கிறார்கள், விரைவில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம்.

டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது, இந்த கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களை நாடாளுமன்ற செயலாளர்களாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நியமித்தார். இது அமைச்சருக்கு இணையான பதவியாகும்.

ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களும் ஆதாயம் இரும் இரட்டை பதவி வகிப்பதாக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இது தொடர்பாக வழக்கறிஞர் பிரசாந்த் படேல் என்பவர் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு புகார் அனுப்பினார். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன.

இதனையடுத்தே தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் குடியரசு தலைவர் கோவிந்த் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்