தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கல்வீச்சு

Report Print Harishan in இந்தியா

தமிழகத்தில் பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிவகாசியில் பட்டாசு மீதான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசு தொழிலாளர்கள் 25 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக தேமுதிக சார்பில் சிவகாசியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி சிவகாசிக்கு சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த தனது மனைவி பிரேமலாதா மற்றும் மைத்துனர் சுதீஷ் அகியோருடன் போராட்டத்தில் பங்கேற்று பேசினார்.

தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் போராட்டத்தை மட்டுமே நிறுத்தியுள்ளனர், இன்னும் ஒரு வாரத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி சீன பட்டாசை இறக்குமதி செய்தால் சிவகாசியில் பட்டாசு தொழில் பெரும் பாதிப்பை சந்திக்கும் என பேசியுள்ளார்.

அப்போது விஜயகாந்த் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த சிலர் மேடையை நோக்கி கற்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பையும் மீறி யார் கற்களை ஏறிந்தார்கள் என்று தெரியவில்லை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கல் எறியப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்