9 வயது சிறுமிக்கு 39 வயது நபருடன் திருமணம்

Report Print Harishan in இந்தியா

தமிழகத்தில் பருவம் கூட எய்திடாத 9 வயது சிறுமியை 39 வயது நபருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினரே முயற்சி செய்தது அம்பலமாகியுள்ளது.

தமிழகத்தின் திருச்சியில் கடந்த 18-ஆம் திகதி அன்று முசிறி அனைத்து பெண்கள் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், திடுக்கிடும் தகவல் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் 9 வயது பள்ளி மாணவியை 39 வயது நபருக்கு திருமணம் செய்திட மின்னதம்பட்டி கிராமத்தில் முயற்சி நடப்பதாக அந்த நபர் கூறியதால், அதிர்ச்சியடைந்த பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை துவங்கியுள்ளனர்.

அப்போது அந்த மர்ம நபர் கூறிய, அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் 9 வயது மாணவியே குடும்பத்தினர் இணைந்து 39 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்திட முயற்சி செய்து வருகின்றனர் என்ற தகவல் உண்மை என தெரியவந்துள்ளது.

அந்த சிறுமி பருவம் கூட அடையாத நிலையில் குடும்பத்தினரே இவ்வாறு வக்கிரச் செயலில் இறந்தியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், சிறுமியை மீட்டு குழந்தைகள் நலக்குழுவிடம்(child welfare committee) ஒப்படைத்துள்ளனர்.

இது குறித்து அந்த சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், தற்போது திருமண நிச்சயம் செய்ய மட்டும் தான் ஏற்பாடுகள் செய்தோம். பருவம் அடைந்த பின் தான் திருமணம் நடைபெறும் என கூறியுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக, குழந்தை திருமண தடைச் சட்டம்(2006) மற்றும் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்