நடிகர் ஜெகன் காரில் மோதி இறந்த இளைஞர்: நடந்தது என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் வந்தவாசி அருகே நடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும், ஜெகன் போதைப்பொருள் பயன்படுத்தி காரை ஓட்டிச்சென்றால் அந்த இளைஞர் பலியாகிவிட்டார் என்ற தகவல் வெளியானதால், இதற்கு விளக்கமளித்துள்ள நடிகர் ஜெகன், நான் ஒருபோதும் கார் ஓட்டியது கிடையாது, தனிப்பட்ட கார் ஓட்டுநர் இருக்கிறார்.

நெடுஞ்சாலையில் காரை நிறுத்திவிட்டு எனது ஓட்டுநர், சிறுநீர் கழிக்க சென்றுவிட்டார், அப்போது குடிபோதையில் காரை ஓட்டி வந்த நபர், நின்றுகொண்டிருந்த எனது காரின் மீது மோதினார்.

இதனைத்தொடர்ந்து, அவசர ஊர்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார், ஆனால் அவர் இறந்துவிட்டார். இதுதான் நடந்தது.

ஆனால், இந்த விபத்து குறித்து சில பொய்யான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்