உலகத் தலைவர்களை ஏன் கட்டிப்பிடிக்கிறேன் தெரியுமா?: பிரதமர் மோடி விளக்கம்

Report Print Kabilan in இந்தியா

தன்னை சந்திக்கும் உலகத் தலைவர்களை கட்டிப்பிடிப்பது ஏன் என்று, இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி, உலகத் தலைவர்களை சந்திக்கும் போது கட்டியணைத்து வரவேற்று வருகிறார். இவரின் இந்த செயலை எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சித்து வருகிறது.

மேலும், வெளிநாட்டு தலைவர்களை மோடி சந்திக்கும்போது ஏற்பட்ட நிகழ்வுகளை வைத்து விமர்சித்து, வீடியோ ஒன்றையும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி கூறுகையில், ‘நான் சாதாரண மனிதன், எனக்கு அனைத்து நெறிமுறைகளும், மரபுகளும் தெரியாது.

இந்த சாதாரண மனிதனின் திறந்த மனப்பான்மை உலகத்தால் விரும்பப்படுகிறது. அதனாலேயே நட்பு உறவுகள் கைக்குள் வந்து விடுகிறது.

மற்ற தலைவர்களைப் போல நானும் பயிற்சி பெற்றிருந்தால் கைகொடுப்பது, வலது மற்றும் இடது பக்கம் பார்ப்பது போன்ற மரபுகளை பின்பற்றியிருப்பேன்.

ஆனால், நான் ஒரு சாதாரண மனிதன். என் நாட்டிற்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது என்பதையே நான் முயற்சிக்கிறேன்.

உலக தலைவர்கள் அருகில் நிற்கும்போது நான் நரேந்திர மோடி அல்ல, 1.25 பில்லியன் மக்களின் பிரதிநிதி என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்