மது குடிக்க மகளை ஆண்களிடம் வாடகைக்கு விட்ட தந்தை: அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் மது குடிக்க தேவையான பணத்துக்காக சிறுமியான தனது மகளை பலருக்கு வாடகைக்கு விட்ட தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சிறுமியை பலாத்காரம் செய்த ஆறு பேரை ஏற்கனவே பொலிசார் கைது செய்துள்ள நிலையில், சனிக்கிழமை சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளனர்.

இதில் முதல் குற்றவாளியான அதிரா அலியாஸ் குளேரியா (24) அளித்துள்ள வாக்குமூலத்தில், மாற்றுதிறனாளியான சிறுமியின் தந்தைக்கு மது குடிக்க 300 ரூபாய் பணம் கொடுத்து சிறுமியை அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.

நெல்சன் தாமஸ் (40) கே.ஜி லைஜூ (38) ஆகிய பொலிஸ் உயர் அதிகாரிகளும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், கைதான ஆறு பேரில் இருவர் ஆவார்கள்.

ஜினுமன் (22) மற்றும் பிரின்ஸ் (28) ஆகிய இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த வழக்கில் மேலும் சம்மந்தபட்டவர்கள் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையில், பொலிஸ் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த கேரள மாணவர் சங்கத்தினர், வழக்கில் சிக்கியுள்ள பொலிஸ் அதிகாரிகளை பொலிசார் காப்பாற்ற முயல்வதாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.

மேலும், ஐ.ஜி ரேங்க் கொண்ட அதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு தான் வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்