இறப்புக்கு இவரே காரணம்: கையில் தற்கொலை குறிப்பு எழுதி வைத்து உயிரைவிட்ட பெண்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் அரசியல் கட்சி பிரமுகரின் தொடர் துன்புறுத்தலால் திருமணமான இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தின் அசோக்நகர் மாவட்டத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

பூஹ்ல்பாய் குஸ்வஹா (30) என்ற பெண்ணுக்கு நபர் ஒருவருடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் குஸ்வஹாவின் கணவர் வீட்டில் உள்ள படுக்கைறையில் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது சமையலறையில் இருந்த குஸ்வஹா திடீரென அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குஸ்வஹாவை தேடி அங்கு வந்த அவரின் குழந்தை, தாய் தூக்கில் தொங்குவதை பார்த்துவிட்டு தனது தந்தையிடம் கூறியுள்ளது.

இதையடுத்து குஸ்வஹாவின் கணவர் பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் பொலிசார் மிகவும் தாமதமாகவே சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் மூன்று மணி நேரத்துக்கு பின்னரே சடலத்தை கைப்பற்றினார்கள்.

அப்போது குஸ்வஹாவின் கையில் மாநிலத்தில் உள்ள ஒரு கட்சி தலைவரின் மகன் பாபி தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், அதனால் தான் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.

ஆனால் இதை மறுத்துள்ள பாபியின் தந்தை, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இது போல யாரோ செய்துள்ளதாவும், இதில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்