மனைவியை கொலை செய்த கணவன் தற்கொலை முயற்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டம் கிராமத்தை சேர்ந்தவர் இருளாண்டி(55). கூலித் தொழிலாளியான இவருக்கு மீனாட்சி(50) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்றிரவு தனது மனைவி மீனாட்சியுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் நடந்துள்ளது.

அதன் பின் ஆத்திரத்தில் அவர், மனைவி என்று கூட பாராமல் அரிவாளால் மீனாட்சியை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து விடியும் வரை மீனாட்சியின் உடல் அருகிலேயே இருளாண்டி அழுதுள்ளார்.

அப்போது இருளாண்டியை வேலைக்கு அழைப்பதற்காக நாக சுந்தரம் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

மீனாட்சி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரிடம் கேட்டுள்ளார். இதில் இருவரும் வாக்கு வாதம் நடக்க, நாகசுந்தரத்தையும் அரிவாளால் வலதுகையில் இருளாண்டி தாக்கியுள்ளார்.

அதன்பின்னர் இருளாண்டி, தனது கையில் இருந்த அரிவாளால் தன்னைத்தானே தலையிலும்,கத்தியின் மூலம் வயிற்றிலும் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் இருவரையும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில், இருளாண்டி கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்