தேவைகளை நிறைவேற்றும் அதிசய பூதம்

Report Print Harishan in இந்தியா

இந்தியாவில் கண்ணாடி புட்டிக்குள் அதிசய பூதம் இருப்பதாக கூறி 10 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்கத்தாவின் பகுயாட்டியைச் சேர்ந்த டபஸ் ராய் சவுத்ரி என்னும் நபரிடம் பேசிய அவரது நண்பர் ஒருவர், உன் தேவை அனைத்தையும் நிறைவேற்றித்தரும் அதிசய பூதம் தனக்கு தெரிந்த நபரிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

அதிசய பூதம் இருப்பதாக நம்பிய சவுத்ரியும், பூத வியாபாரியை சந்திக்க தனது நண்பருடன் சென்றுள்ளார்.

இருவரையும் பொலிஸ் வாகனத்தில் வரவேற்று அருகில் உள்ள ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர், சவுத்ரியிடம் 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பூதத்தை பார்த்தால் பணம் தருவதாக சவுத்ரி கூறியதால், ஒரு ரூபாய் நாணயம் உள்ளே கிடந்த குளிர்பான பாட்டிலை காண்பித்து இது தான் பூதம் என கூறியுள்ளனர்.

சவுத்ரியும் அவரது நண்பரும் ஏமாற்றப்பட்டதை உணரும் தருணத்தில் 4 நபர்களும் சேர்ந்து சவுத்ரி மற்றும் அவரது நண்பரை சரமாரியாக தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த 600 ரூபாய் பணத்தை அபகரித்துச் சென்றுள்ளனர்.

ஓட்டல் அறையை பூட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதால் தன் கைபேசி மூலம் நண்பருக்கு சவுத்ரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுத்ரி மற்றும் அவரது நண்பரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பொலிஸ் வாகன ஓட்டுநர் உட்பட 4 நபர்களை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்