மீண்டும் ஒருதலைக் காதல் விபரீதம்: இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

Report Print Harishan in இந்தியா

இந்தியாவின் தமிழகத்தில் காதலை ஏற்றுக் கொள்ளாத இளம்பெண்ணை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் திருநெல்வேலியில் உள்ள தென்காசி பகுதியில் செல்போன் கடையில் வேலை செய்து வரும் இளம்பெண் கோகிலா.

கோகிலா வேலை பார்த்து வந்த பகுதியில் வசித்து வரும் ராமர் என்பவர், கோகிலாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்த ராமர், ஒரு கட்டத்தில் மிக மோசமாக கோகிலாவிற்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று கடும் ஆத்திரமடைந்த ராமர், கோகிலாவின் வயிற்றில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த கோகிலாவை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

சம்பவம் குறித்து திருநெல்வேலி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராமரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்