குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட நபர்

Report Print Kabilan in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐடி ஊழியர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் ஜெயேஷ் படேல், ஐடியில் வேலை பார்க்கும் இவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அங்கு வந்த பொலிசார் வீட்டை திறந்து பார்த்த போது, ஜெயேஷ் படேல், அவரது மனைவி இருவரும் தூக்கில் தொங்கி இறந்திருந்தனர், அவர்களது 4 வயது மகன் தரையில் இறந்து கிடந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், ‘கணவன், மனைவி இருவரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்ததால், இது தற்கொலையாக இருக்கலாம்.

ஆனால், சிறுவனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. ஆகையால், அவனின் இறப்பு குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.

சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், ஜெயேஷ் படேல் மனவருத்துடன் இருந்ததாக அவரது நண்பர்கள் கூறினர், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது’ என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்