நடிகர் ஜெகன் கார் மோதி இளைஞர் பரிதாப பலி

Report Print Gokulan Gokulan in இந்தியா

வந்தவாசி அருகே நடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் ஜொலித்து வரும் நட்சத்திரங்களில் ஒருவர் ஜெகன்.

இவர் வந்தவாசி வழியாக சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது, வெண்குன்றம் தர்கா அருகே உள்ள தாழம்பள்ளம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார்.

கார் மோதியதில் ஹுசைன் என்ற மினிலாரி ஓட்டும் இளைஞர் படுகாயமடைந்தார், இதையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஜெகனை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதன்போது ஏராளமான மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்