கணவனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்: அழுது புரண்ட காதலி

Report Print Fathima Fathima in இந்தியா

கிருஷ்ணகிரியின் போச்சம்பள்ளி அருகே வேர்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவரது மகன் பவித்ரன்(வயது 26), டிப்ளமோ என்ஜினியரிங் படித்துள்ளார்.

இவர் அகரம் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரின் மகள் மஞ்சுவை(வயது 25) காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஆறு வருடங்களாக காதலித்து வரும் நிலையில், இது பவித்ரன் வீட்டுக்கு தெரியவந்துள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், மஞ்சுவை மிரட்டியுள்ளனர், இதனை தொடர்ந்து கடந்த 15ம் திகதி கருநடு பழனியாண்டவர் முருகன் கோவிலில் மஞ்சுவின் பெற்றோர் முன்னிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதற்கிடையே பவித்ரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர்.

இதன்படி நேற்று காலை திருமணம் நடத்த திட்டமிட்டு மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் மஞ்சு கதறி அழுது தகராறு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து திருமண மண்டபத்தின் முன்பு தர்மபுரி- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

இதனால் சுமார் ஒருமணிநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தகவலறிந்து வந்த அதிகாரிகள் மஞ்சுவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொலிசார் கூறுகையில், காலை 9 மணிக்கு திருமணம் என அறிவித்துவிட்டு, 7 மணிக்கே திருமணத்தை முடித்துவிட்டனர், எங்களுக்கு முன்கூட்டியே தெரியவந்தால் உடனடியாக தடுத்தி நிறுத்தியிருப்போம் என தெரிவித்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்