முன்னாள் காதலருடன் ஐஸ்வர்யா ராய்: வைரலாகும் புகைப்படம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் தனது முன்னாள் காதலருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.

அந்த வகையில், மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சியில் தனது மனைவி சாராவுடன் பெஞ்சமின் நெதன்யாகு கலந்துகொண்டார்.

நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், விவேக் ஒபராய், சாரா அலி கான், இயக்குநர்கள் கரன் ஜோகார், சுபாஷ் காய், இம்தியாஸ் அலி உள்ளிட்டோர் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இரவு விருந்தில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலிவுட் பிரபலங்களுடன் உற்சாகமாக செல்பி எடுத்துக் கொண்டார்.

இந்த செல்பி புகைப்படம் தான் தற்போது ஹாலிவுட் உலகில் வைரலாகி வருகிறது. ஏனெனில், நடிகை ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர் விவேக் ஒபராய் அந்த புகைப்படத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

காதல் பிரிவுக்கு பின்னர், இருவரும் ஒருவரையொருவர் எந்தவொரு நிகழ்ச்சியிலும் இதுவரை சந்தித்துக்கொள்ளவில்லை, தற்போது ஒரே புகைப்படத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்