ஜெயலலிதா மரணம்! சசிகலா சகோதரர் திவாகரன் பரபரப்பு தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில் திவாகரன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அதாவது டிசம்பர் 5ம் திகதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இவரது மரணத்தில் மர்மம் நீடித்து வரும் நிலையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன், ஜெயலலிதா 4ம் திகதி மாலை 5.15 மணிக்கு இறந்துவிட்டதாகவும், மருத்துவமனையின் பாதுகாப்புக்காக ஒருநாள் தாமதமாக மரணம் அறிவிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயலலிதாவின் இறப்பை ஏன் அறிவிக்கவில்லை என கேட்டபோது, அப்பல்லோ மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படி நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசிய போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்