பாலியல் தொழிலாளிகளிடம் செல்லும் ஆண்களுக்கும் கடும் தண்டனை

Report Print Fathima Fathima in இந்தியா

ஆந்திராவில் பெண்கள் கடத்தலை தடுக்கும் விதத்தில் புதிய தண்டனையை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவில் இளம்பெண்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்படுவது அதிகரித்து வருகிறது, இதனை தடுக்க பாலியல் தொழிலாளிகளிடம் செல்லும் ஆண்களுக்கும் தண்டனை விதிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆலோசனை குழுவை ஆந்திர அரசு அமைத்துள்ளது, இரண்டு மாதங்களில் இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.

ஒருவேளை இப்புதிய தண்டனை நிறைவேற்றப்பட்டால் மற்ற மாநிலங்களுக்கு ஆந்திரா முன்மாதிரியாக திகழும் என பெண் கடத்தலை தடுக்க இயங்கிவரும் பிரஜ்வாலாவின் இணை நிறுவனர் சுனிதா கிருஷ்ணன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவை மற்றும் பெறுதலை பொறுத்தே மனித கடத்தல் உள்ளது. பாலியல் தொழிலாளர்களிடம் செல்லுபவர்களுக்கு உடனடி தண்டனை கிடைத்தால், மாட்டிக்கொள்வோம் என்ற பயம் அதிகரிக்கும். பெண்கள் கடத்தப்படுவதை தடுக்க இது வழிவகுக்கும்.

மனித கடத்தலை தடுப்பது, மீட்கப்பட்ட பெண்களின் பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு அளிப்பது, குற்றவாளிகளை விரைவாகத் தண்டிப்பது என போன்றவை இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்