தங்கையின் திருமண வரவேற்புக்கு சென்ற போது விபத்து: அண்ணன் பரிதாப மரணம்

Report Print Kabilan in இந்தியா

தனது சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த இருவர் கார் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்(26), இவர் தனது குடும்பத்தினருடன், சிம்லாவில் நடைபெறவிருந்த தனது சகோதரியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு காரில் சென்றுள்ளார்.

பிரவீன் காரை ஓட்ட அவருடன் மூன்று பேர் பயணித்துள்ளனர், நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பசு சாலையின் குறுக்கே வந்துள்ளது.

உடனடியாக காரை நிறுத்த முயற்சித்துள்ளார் பிரவீன், ஆனால் கார் வேகமாக சென்றதால் அவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பிரவீன் மற்றும் அனில்(20) என்பவர் உயிரிழந்தனர்.

காரில் இருந்த மற்ற இருவர் படுகாயமடைந்தனர், பின்னால் மற்றொரு காரில் வந்துகொண்டிருந்த பிரவீனின் உறவினர்கள், விபத்து நிகழ்ந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பிரவீனின் உயிரிழப்பு காரணமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்