6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார்: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

Report Print Harishan in இந்தியா

அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க உள்ளதாக கடந்த டிசம்பர் 31-ஆம் திகதி நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் வேளையில் தற்போது 6 மாதத்தில் தேர்தல் நடைபெற்றாலும் சந்திக்க தயார் என கூறியுள்ளார்.

மேலும் நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்க உள்ளதாக கூறியதற்கு தனது வாழ்த்துக்களையும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கமலுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ’காலம் தான் பதில் சொல்லும்’ என ரஜினிகாந்த கூறியுள்ளார்.

ரஜினி கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது, 33 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக நேற்று வெளியான இந்தியா டுடே கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்