அரை நிர்வாணமாக இறந்து கிடந்த தொகுப்பாளினி வழக்கில் திருப்பம்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in இந்தியா

மும்பையில் அரை நிர்வாணமாக இறந்து கிடந்த தொகுப்பாளினி வழக்கு தொடர்பாக அவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அர்பிதா திவாரி (24) என்ற தொகுப்பாளினி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 11-ஆம் திகதி தனது காதலர் பங்கஜ் (30) மற்றும் நண்பர்களுடன் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்தார்.

15-வது மாடியிலிருந்த கழிப்பறை ஜன்னல் வழியாக அர்பிதா கீழே குதித்தார் என அவருடன் இருந்தவர்கள் பொலிசாரிடம் கூறினார்கள்.

இந்த வழக்கில் அர்பிதாவுடன் தங்கியிருந்த நண்பர்களில் ஒருவரான அமித் ஹஸ்ராவை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அர்பிதாவை கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில் அவரை பொலிசார் கைது செய்தனர்.

அர்பிதா இறக்கும் போது உடனிருந்த அனைவரிடமும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அர்பிதாவின் தந்தை கூறுகையில், பங்கஜ், அமித், மனிஷ், ஸ்ரவன் ஆகியோர் அடுக்குமாடி குடியிருப்பில் சம்பவம் நடந்த அன்று தங்கியிருந்தனர்.

சமையல்காரரும் உடன் தங்கியிருந்தார், இவர்களில் யாராவது அல்லது எல்லோரும் சேர்ந்து தான் அர்பிதாவை ஏதாவது செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.

அதே சமயத்தில் தற்போது கைது செய்யப்பட்ட அமித், அர்பிதாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வந்துள்ள நிலையில் அதுகுறித்தும் பொலிசார் விசாரிக்கிறார்கள்.

பொலிஸ் விசாரணையில் பங்கஜ் கூறுகையில், நாங்கள் அதிகாலை 4 மணிக்கு தான் தூங்க சென்றோம். 9 மணிக்கு நான் எழுந்து பார்த்த போது அர்பிதாவை வீட்டில் காணவில்லை.

ஜன்னல் வழியாக பார்க்கும் போது அரைநிர்வாண நிலையில் இரண்டு மாடிகளுக்கு இடையில் சடலமாக தொங்கி கொண்டிருந்தார் என கூறியுள்ளார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அர்பிதாவின் சகோதரி ஸ்வேதா கோரிக்கை வைத்துள்ளார்.

அர்பிதாவின் நண்பர் லக்கி சர்மா கூறுகையில், தனக்கும் காதலர் பங்கஜுக்கும் பிரச்சனை உள்ளது என அர்பிதா தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்