தன்னுடைய வீட்டு வாசலில் நின்றவரை அடித்த பொலிசின் அராஜகம்

Report Print Harishan in இந்தியா

தன்னுடைய வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மென்பொறியாளரை பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

சென்னையில் மடிப்பாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கார்த்திக், மென்பொறியாளராக பணியாற்றி வரும் இவர் உள்ளகரத்தில் உள்ள தனது வீட்டு வாசலில் நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மடிப்பாக்கம் காவல் உதவி-ஆய்வாளர் கார்த்திக், ’வீட்டு வாசலில் எதற்கு நிற்கிறாய்?’ என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த மென்பொறியாளர், ’என் வீடு இதுதான்’ என கூறியுள்ளார்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரி, மென் பொறியாளரை கடுமையாக தாக்கியதுடன் கொச்சை சொற்களால் திட்டியதும் தெரிய வந்துள்ளது.

சத்தம் கேட்டு வெளியே வந்த குறித்த நபரின் பெற்றோர், தங்கள் வீட்டு வாசலில் தங்கள் மகன் நிற்பதில் என்ன தவறு என கேட்டு வாக்குவாதம் செய்துள்ள நிலையில் அவர்களையும் பொலிஸ் அதிகாரி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

பொலிஸ் அதிகாரியின் இந்த செயல் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்