ஹச்.ராஜா தீக்குளிப்பாரா? திமுக நிர்வாகி சவால்

Report Print Harishan in இந்தியா

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹச்.ராஜாவிற்கு திமுக நிர்வாகி தமிழன் பிரசன்னா ட்விட்டர் மூலம் சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் சென்னையில் 41-வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இதில் தமிழன் பிரசன்னா எழுதியுள்ள ‘இவன் கருப்பு சிவப்புக்காரன்’ புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய திமுக நிர்வாகி, புனித நூல்களை குப்பை என பேசியதால் விரட்டப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக-வின் தேசிய செயலாளர் ஹச்.ராஜா தெரிவித்திருந்தார்.

மேலும் நடைபெற்று வரும் 41-வது புத்தக கண்காட்சியை தவறுதலாக 10-வது புத்தக கண்காட்சி என்றும் குறிப்பிட்டிருந்தார் ஹச்.ராஜா.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழன் பிரசன்னா, "நான் புனித நூல்களை குப்பை என்று பேசியதையும், நீங்கள் குறிப்பிட்டு உள்ளபடி ஏதேனும் நிகழ்வு நடந்ததாக நிருப்பித்தால் நான் தீக்குளிக்க தயார், இல்லை என்றால் எச்.இராஜா தீக்குளிப்பாரா...? " என சவால் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்